பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள் |
மஞ்சள் இலைப்புள்ளி நோய்: மைக்கோஸ்போரெல்லா மியூசிகோலா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும்.
- இப்புள்ளிகள் பின்பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன.
- பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழிப்பகுதியும் தோன்றும்.
- இச் சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் வாடிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது.
- நெருக்கமான நடவு, மண்ணில் அதிகக் களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்நோய்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தும். நோய்க்காரணிப் பூஞ்சாணம் இலையின் அடிப்பாகத்திலுள்ள நுண்ணிய துளைகளின் மூலம் பரவுகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
வெளிர் மஞ்சள் அல்லது பச்சை நிற புள்ளிகள் |
|
நீள் வடிவத்தில் பழுப்பு நிறப் பெரும் புள்ளிகள் |
|
|
|
|
|
கட்டுப்படுத்தும் முறை:
- நோய்த் தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்கவும்.
- இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்கவும்.
- நெருங்கிய இடைவெளி, குறைந்த நடவு முறையைத் தவிர்க்கவும்.
- சரியான வடிகால் வசதி அமைப்பதால் வயலில் நீர்தேங்காமல் தடுக்கலாம்.
- கார்பென்டஸிம் 0.1% அல்லது புரப்பிகோனஸோல் 0.1% அல்லது மேன்கோஷெப் 0.25% ஏதேனும் ஒரு மருந்துடன் ஒட்டுந் திரவமான டிப்பால் சேர்த்து 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதியில் கரும்புள்ளிகள் தெரிந்த நாளிலிருந்து 3 முறை தெளித்து வரவேண்டும்.
|
|
|